Get Mystery Box with random crypto!

The Seithikathir®

Logo saluran telegram seithikathir — The Seithikathir® T
Logo saluran telegram seithikathir — The Seithikathir®
Alamat saluran: @seithikathir
Kategori: Tidak terkategori
Bahasa: Bahasa Indonesia
Pelanggan: 15.11K
Deskripsi dari saluran

WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Ratings & Reviews

4.33

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

2

3 stars

0

2 stars

0

1 stars

0


Pesan-pesan terbaru 2

2023-07-22 16:58:24 FCU-வை செப்டம்பர் 4ம் தேதி வரை அமைக்க மாட்டோம் என பாம்பே உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலியான செய்திகளை கண்டறிய, செய்தியின் உண்மைத் தன்மையை சரி பார்க்கும் பிரிவை (FCU - Fact Check Unit) செப்டம்பர் 4ம் தேதி வரை அமைக்க மாட்டோம் என பாம்பே உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளின் கீழ், சமூக வலைதளங்களில் மத்திய அரசு குறித்து போலி அல்லது மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகள் பகிரப்பட்டால், அதனை தணிக்கை செய்ய அல்லது மாற்றி அமைக்க உத்தரவிட இப்பிரிவுக்கு அதிகாரம் உள்ளது!
1.7K viewsThe Seithikathir, 13:58
Buka / Bagaimana
2023-07-22 16:55:20 ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து 4 பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 3 பயணிகளுடன் பறந்த ஹெலிகாப்டர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது. இதில் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
1.6K viewsThe Seithikathir, 13:55
Buka / Bagaimana
2023-07-22 16:53:22 இந்தியாவில் 3ல் ஒருவருக்கு சமூக வலைதள கணக்கு

டிஜிட்டல் ஆலோசனை நிறுவனமான 'கேபியோஸ்' நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் 500 கோடி மக்கள் (மொத்த மக்கள் தொகையில் 64%) சமூக ஊடகங்களில் உள்ளனர்.

ஒவ்வொரு நொடிக்கும் 5 பேர் புதிதாக இணைகிறார்கள்.

கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில், 11 பேரில் ஒருவருக்கு சமூக ஊடக கணக்கு உள்ளது.

இந்தியாவில், 3 பேரில் ஒருவருக்கு கணக்கு உள்ளது.

சராசரியாக ஒவ்வொரு பயனரும் தினமும் சுமார் 2.26 மணிநேரம் செலவிடுகின்றனர்.
1.6K viewsThe Seithikathir, 13:53
Buka / Bagaimana
2023-07-22 16:51:51 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிப்பு - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

தனது தாயார் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் வருகை

தனது தாயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
1.5K viewsDeva Nathan, 13:51
Buka / Bagaimana
2023-07-22 16:30:37 திரைப்படங்களின் திருட்டுப் பிரதிகளை தயாரிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை: மசோதாவில் பரிந்துரை

திரைப்படங்களின் திருட்டுப் பிரதிகளை தயாரிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, திரைப்பட தயாரிப்புச் செலவில் 5 சதவீதம் அபராதம் விதிக்க ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா 2023-ஐ மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தாக்கல் செய்தாா்.

அந்த மசோதாவில், திரைப்படங்களை திருட்டுத்தனமாகப் பதிவு செய்வதற்கு தடை விதிக்கும் 6ஏஏ பிரிவு , அவ்வாறு படம்பிடிக்கப்பட்ட திரைப்படத்தின் திருட்டுப் பிரதியை வெளியிடத் தடை விதிக்கும் (6ஏபி) ஆகிய புதிய பிரிவுகளை ஒளிப்பதிவு சட்டத்தில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப் பிரிவுகளை மீறி, திரைப்படங்களின் திருட்டுப் பிரதிகளை தயாரிப்போருக்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக திரைப்படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி திரைப்படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கும்போது, அதை வயதுவாரியாக, அதாவது ‘யுஏ7+’, ‘யுஏ13+’ மற்றும் ‘யுஏ16+’ என 3 பிரிவுகளாக வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir
1.7K viewsThe Seithikathir, 13:30
Buka / Bagaimana
2023-07-22 16:23:51 இந்தியா கூட்டணியில் எந்தப் பதவியும் கோரவில்லை: மம்தா பானா்ஜி

‘2024 மக்களவைத் தோ்தலில், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கம்; மாறாக, எந்தப் பதவியையும் கோருவது அல்ல’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
1.6K viewsThe Seithikathir, 13:23
Buka / Bagaimana
2023-07-22 13:56:01
அமெரிக்க கடற்படையின் தலைமைத் தளபதியாக லிசா ஃபிரான்செட்டி நியமனம்! அமெரிக்க கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் லிசா ஃபிரான்செட்டியை ஜோ பைடன் அறிவித்துள்ளார். அவரது நியமனம் அமலுக்கு வரும் போது, கடற்படையை வழிநடத்தும் அட்மிரல் பதவியை வகிக்கும் முதல் பெண்…
2.0K viewsThe Seithikathir, 10:56
Buka / Bagaimana
2023-07-22 13:54:24 அமெரிக்க கடற்படையின் தலைமைத் தளபதியாக லிசா ஃபிரான்செட்டி நியமனம்!

அமெரிக்க கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் லிசா ஃபிரான்செட்டியை ஜோ பைடன் அறிவித்துள்ளார். அவரது நியமனம் அமலுக்கு வரும் போது, கடற்படையை வழிநடத்தும் அட்மிரல் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுகிறார் லிசா ஃபிரான்செட்டி.
  
அமெரிக்க கடற்படைத் தளபதி அடமிரல் மைக் கில்டேயின் நான்கு ஆண்டு பதவிக்காலம்  முடிவடையும் நிலையில், அடுத்த இடத்தில் உள்ள லிசா ஃபிரான்செட்டியை கடற்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். 
பைடனின் தேர்வு அமெரிக்க ராணுவத்தில் பாலின பிரதிநிதித்துவத்திற்காக குறிப்பிடத்தக்க மைல்கல்லாக லிசா ஃபிரான்செட்டி நியமனம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், லிசா ஃபிரான்செட்டி நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளிக்குமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 
கடற்படையில் வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களை இயக்குதல் ஆகியவற்றில் லிசா ஃபிரான்செட்டி திறம்பட பணியாற்றி உள்ளார். பரந்த அளவில் மதிக்கப்படுபவர் மற்றும் ஆழ்ந்த நிபுணத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் மற்றும் சீனாவின் அதிகரித்து வரும் பிரச்னையை சமாளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir
2.0K viewsThe Seithikathir, 10:54
Buka / Bagaimana
2023-07-22 13:49:07 உக்ரைன் வரும் சரக்குக் கப்பல்களைத் தாக்க ரஷியா ஆயத்தம்

உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தாங்கள் முழு தயாா் நிலையில் இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இது குறித்து குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான போா் ஒத்திகையை எங்களது கருங்கடல் படைப் பிரிவு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
அந்தப் பயிற்சியின்போது, எங்களது போா்க் கப்பல்கள் இவானோவெட்ஸ் ரக கப்பல் அழிப்பு ஏவுகணைகளை இலக்குக் கலத்தின் மீது ஏவி சோதனை நடத்தின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் ரஷியா போா்க் கப்பல்களை நிறுத்தி அந்தக் கடல் வழியாக பிற நாடுகளுக்கு உக்ரைன் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை ஏற்படுத்தியது.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir

இதற்கிடையே, தானிய ஒப்பந்த அமலாக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் உக்ரைனுக்குச் செல்லும் எந்த சரக்குக் கப்பலும் ராணுவ தளவாடங்களை ஏந்திச் செல்லக்கூடிய கப்பலாகக் கருதப்படும் என்று ரஷியா அறிவித்தது.

அதன் மூலம், உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷியா குறிப்பிட்டது.
இருந்தாலும், தங்களது தானியங்களை புதிய வழித்தடம் மூலம் தொடா்ந்து ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக உக்ரைன் கூறியிருந்தது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்களைத் தாக்குவதற்கான போா் ஒத்திகையை தாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டதாக ரஷியா தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1.9K viewsThe Seithikathir, 10:49
Buka / Bagaimana
2023-07-22 13:27:27 கரோனாவுக்குப் பிறகு இளைஞா்களிடையே மாரடைப்பு அதிகரிப்பு?

கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு இளைஞா்களிடையே மாரடைப்பால் ஏற்படும் திடீா் மரணம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்தி வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞா்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘கரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடா்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோருக்கு திடீா் மாரடைப்பு ஏற்படுவது தொடா்பாக சுமாா் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே வேளையில், கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மாரடைப்புக்கும் தொடா்புள்ளதா என்பது குறித்து சுமாா் 30 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயம் சாா்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தேசிய தொற்றாநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir

இதயம் சாா்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் கீழ் 60 கோடிக்கும் அதிகமானோா் பலனடைந்துள்ளனா்.

இதயம் சாா்ந்த நோய்களுக்கான பொதுப் பெயா் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
1.9K viewsThe Seithikathir, 10:27
Buka / Bagaimana